திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட ஆடைக்கட்டுப்பாடு தளர்வு….

295

திருவனந்தரபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட ஆடைக்கட்டுப்பாட்டை கோவில் நிர்வாகம் தளர்த்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் பெண்கள் சாமி தரிசனம் செய்வதற்கு முன்பு ஆடைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற ஆடைகளை அணிந்து வரும் பெண்கள் அதன்மீது கேரள பாரம்பரிய முறைப்படி வேட்டிக்கட்டிக்கொண்டால் தான் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்நிலையில், சேலையைக்காட்டிலும் சுடிதார், சல்வார் கமீஸ் போன்ற ஆடைகளை அணிவதே தங்களுக்கு சௌகரியமாக உள்ளதாக கோவிலுக்கு வரும் பெண்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இது குறித்து 30 நாட்களுக்குள் முடிவு செய்யுமாறு கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், பெண்களுக்கு விதிக்கப்பட்ட ஆடைக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் சுடிதார் அணிந்த பெண்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.