ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் சிறு வணிகர்கள் பாதிப்பு !

257

ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததில் இருந்து, நாடு முழுவதும் சிறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
25-வது அகில இந்திய வங்கி ஊழியர்கள் மாநாடு சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்றது. கடந்த 8-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில், கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்று உரையாற்றினர். ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததில் இருந்து, நாடு முழுவதும் சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நவம்பர் 8-ம் தேதிக்குப் பின்பு வங்கி ஊழியர்களின் பணி அளப்பரியது என பினராயி விஜயன் பாராட்டினார்.