பச்சைப்பசலென பட்டாடை விரித்ததுபோல் மாறிய திம்பம் மலைப்பாதை பார்வையாளர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது

1204

பச்சைப்பசலென பட்டாடை விரித்ததுபோல் மாறிய திம்பம் மலைப்பாதை பார்வையாளர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள திம்பம் மலைப்பாதையில் 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த சாலை வழியே 24 மணி நேரமும் பேருந்து மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக கடும் வறட்சியால் மலைப்பாதையில் மரங்கள் அனைத்தும் காய்ந்து இருந்தன. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் காய்ந்து கிடந்த மரங்கள் அனைத்தும் துளிர்விட்டு பச்சை நிறமாக பட்டாடை விரித்ததுபோல் மாறியுள்ளது. திம்பம் மலைப்பாதை வழியாக பயணம் செய்வோர் கண்கொள்ளா காட்சியை ரசித்த வண்ணம் பயணிக்கின்றனர்.