பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் குறித்து இதுவரை மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

214

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் குறித்து இதுவரை மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
லாவோஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். அப்போது பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்துக்கு இந்தியா இந்த ஆண்டிற்குள் ஒப்புதல் அளிக்கும் என பிரதமர் மோடி ஒபாமாவிடம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து மத்திய அரசு இதுவரை முடிவு எதுவும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான உள்நாட்டு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவை முடிந்த பிறகே முடிவெடுக்கப்படும் என்று விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.