பி.எஸ்.கே. கட்டுமான நிறுவனத்தில் கடந்த 3 நாட்களாக வருமான வரி சோதனை..!

141

பி.எஸ்.கே கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், 112 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் மற்றும் 14 கோடியே 18 லட்சம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது.

நாமக்கல்லைத் தலைமையிடமாக கொண்டு பி.எஸ்.கே கட்டுமான நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளைகள் சென்னை, நாமக்கல், நெல்லை பகுதிகளிலும் இயங்கி வருகின்றன. பி.எஸ்.கே. நிறுவனம் கணக்கில் வராத பணத்தை, பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறைக்கு புகார் வந்தது. இதனையடுத்து, சென்னை,நாமக்கல் உள்ளிட்ட பி.எஸ்.கே. நிறுவனத்திற்கு சொந்தமான 11 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும், பைனான்சியர்கள் ஆகாஷ் பாஸ்கரன், சுஜய் ரெட்டி ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. 3 நாட்கள் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில், 112 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் மற்றும் 14 கோடியே 18 லட்சம் ரூபாய் பணம் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.