தமிழகத்தில் புயல் சேதத்தை மதிப்பிடுவதற்கு மத்திய குழுவை உடனடியாக அனுப்ப வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், ப. சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தை கஜா புயல் தாக்கியது தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பதிவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கஜா புயல் தாக்கியதால் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பீடு செய்ய 2 உயர் அதிகாரிகள் கொண்ட மத்திய குழுவை உடனடியாக அனுப்பி வைக்கும்படி ராஜ்நாத் சிங்கிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாநில அரசின் அறிக்கையை பெற்ற பிறகே மத்திய குழுவை வெள்ளச் சேத பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ள ப. சிதம்பரம், மத்திய உள்துறை அமைச்சகம் வழக்கத்தில் உள்ள இந்த நடைமுறையை மாற்றியமைக்கும்படி தாம் வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.