தருண்விஜய் பேச்சுக்கு கண்டனம் : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

242

தன்னை தமிழ் கருப்பன் என கூறுவது பெருமையாக உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் திமுக வேட்பாளர் மருதுகனேஷை ஆதரித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை வைத்தியலிங்கம் மேம்பாலம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம், ஆளும் கட்சி வலுவிழந்து விட்டதாக சுட்டிக்காட்டினார். இந்நிலையில் பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தருண்விஜயின் சர்ச்சை பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் பாஜக-வை ஆர்.கே.நகர் வாக்காளர்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.