அரசியல் ஆளுமைமிக்க தலைவராகியுள்ளார் மோடி : ப.சிதம்பரம்

252

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மூலம் அரசியல் ஆளுமைமிக்க தலைவராக பிரதமர் மோடி உருவெடுத்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் புகழாரம் சூட்டியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற இந்திய வர்த்தக சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறினார். இதன்மூலம் எந்த மசோதாவையும் அவர்களால் தடையின்றி நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்த சிதம்பரம், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடுமையான பொருளாதார சீர்த்திருத்த கொள்கைகளை தொடரும் என்று கூறினார். ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மூலம் அரசியல் ஆளுமைமிக்க தலைவராக பிரதமர் மோடி உருவெடுத்துள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்தார். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மீதமுள்ள இரண்டு ஆண்டுகால ஆட்சி காலத்தில் புதிய சீர்த்திருங்களால் எட்டு சதவீத வளர்ச்சி நிலைக்கு திரும்ப இயலும் என்று கூறிய சிதம்பரம், அதேநேரம் புதிய வேலை வாய்ப்புக்களை மோடி அரசால் உருவாக்க முடியாது என்றும் தெரிவித்தார்.