ஓசூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்து கணவர், மனைவி உட்பட 3 பேர் பலி..!

626

ஓசூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.பெங்களூருவை சேர்ந்த மருத்துவர்கள் ராமசந்திரன், அம்புஜம் தம்பதியினர் மற்றும் ஓட்டுனர் உட்பட 3 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கொல்லப்பள்ளி அருகே வந்தபோது, நின்று கொண்டிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மருத்துவ தம்பதிகள் மற்றும் கார் ஓட்டுனர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.