பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் : அண்ணா பல்கலைக்கழகம்

146

பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
இந்நிலையில் ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ ஜூன் 3ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 31 கடைசி நாளாகும்.
2017-2018ஆம் கல்வியாண்டுக்கான கலந்தாய்வு அறிவிப்பை பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டிருந்தது. அதன்படி, பொறியியல் கலந்தாய்வு ஜூன் 27 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
முதலில் விளையாட்டுப் பிரிவினர், ராணுவ வீரர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கும் பின்னர் பொதுப் பிரிவினருக்கும் சேர்க்கை நடைபெறும். இதன் தரவரிசைப் பட்டியல் ஜூன் 22ஆம் தேதி வெளியீடப்படும்.