ஜனவரி 1ஆம் தேதி முதல் OTP மூலம், ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்கும் வசதி : மத்திய அரசு முடிவு …!

690

ஜனவரி 1ஆம் தேதி முதல் மொபைல்போன் பயன்படுத்துவோர் ஓடிபி மூலம், ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்கும் வசதியை செய்ய தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதே சமயம், மொபைல் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு பிறகு நீட்டிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
இதனால் கால கெடு முடிந்த பிறகு மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்காத வாடிக்கையாளர்களின் சிரமங்களை தவிர்க்கவும், கடைசி நேர குழப்பங்களை தவிர்க்கவும் ஓடிபி மூலம் இணைக்கும் வசதியை செய்து தர அரசு முடிவு செய்துள்ளது. பயோ மெட்ரிக் இயந்திரம் வேலை செய்யாமல் இருந்தாலும், மொபைல் சேவை மையங்கள் தூரமாக இருந்தாலும் ஓடிபி முறையில், வாடிக்கையாளர்கள் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.