பயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சிகள்..!

172

சென்னை பரங்கிமலையில் உள்ள ஓடிஏ-வில் பயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகள் நடத்திய சாகச நிகழ்ச்சிகளை உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கண்டு ரசித்தனர்.

11 மாத கால ராணுவ பயிற்சி முடிந்த ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி நிறைவு விழா, சென்னை ஓடிஏ-வில் நாளை நடைபெற உள்ளது. அதற்கான ஒருங்கிணைந்த சாகச நிகழ்ச்சிகள் இன்று சென்னை பரங்கிமலையில் அமைந்துள்ள ராணுவ அதிகாரிகளின் பயிற்சி மையத்தில் நடைப்பெற்றது. இதில், குதிரை சவாரி, களரி பைட், ஜிம்னாஸ்டிக் சாகசங்கள், மோட்டார் வாகன சாகசங்கள், வான்வழி சாகசங்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், கலந்துக்கொண்ட ராணுவ அதிகாரிகள், அவர்களுடைய குடும்பத்தினர் சாகச நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். இதனைத்தொடர்ந்து, நாளை நடைபெற இருக்கும் பயிற்சி நிறைவு விழாவில் சிறப்பாக பயிற்சி மேற்கொண்ட இராணுவ அதிகாரிகளுக்கு பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.