கூடுதல் நேரம் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு இரண்டு மடங்கு ஊதியம் வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

434

கூடுதல் நேரம் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு இரண்டு மடங்கு ஊதியம் வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தொழிற்சாலை மசோதா-2016 தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பை பெருக்கவும், தொழிலாளர்களை ஊக்குவிக்கவும் இந்த மசோதா பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
கூடுதல் நேரம் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு நேரத்திற்கு ஏற்ப இரு மடங்கு ஊதியம் தர வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தினமும் 10 மணி நேரத்துக்கு மிகாமலும், ஒரு வாரத்துக்கு 60 மணி நேரத்துக்கு மிகாமலும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று விளக்கம் அளித்தார். இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி பா.ஜ.க. கூட்டணி எம்.பி.க்களின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.