மீத்தேன் திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி மறுப்பு – அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

129

மீத்தேன் திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இதுகுறித்த போராட்டங்கள் தேவையில்லை என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில், ஒஎன்ஜிசி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மயிலாடுதுறையில் வரும் 23ம் தேதி நடைபெற இருந்த இயற்கை மற்றும் கனிமவளம் பாதுகாப்பு மாநாடு, சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக மறுக்கப்பட்டிருக்கலாம் என்றார். தமிழகத்தில் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி இல்லை என்றும், இதுகுறித்த போராட்டங்கள் தேவையில்லை எனவும் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.