ஒரு கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் மீன் ஏலக்கூடம் கட்டுவதற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அடிக்கல் நாட்டினார்..!

123

நாகையில் ஒரு கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் மீன் ஏலக்கூடம் கட்டுவதற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அடிக்கல் நாட்டினார்.

நாகை மாவட்டம் ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராமத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் ஒரு கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் மீன் ஏலக்கூடம் மற்றும் வலைப்பின்னும் கூடம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், நாகை சட்ட மன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் இத்திட்டமானது மீனவ மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும் என கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.