அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம் ஒசாமா பின்லேடன் மகன் மிரட்டல் பேச்சு.

339

தமது தந்தையைக் கொலை செய்த அமெரிக்காவை பழிவாங்கபோவதாக ஒசாமா பின்லேடனின் மகன் எச்சரித்துள்ளார்.

கடந்த, 2011ல், அமெரிக்கப் படையினரால் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட ஒசாமாபின்லேடனின் 20 வயது மகன் ஹம்சா பின்லேடன், இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆடியோவில், நாங்கள் எல்லாருமே ஒசாமாதான் எனக் கூறியுள்ளார். பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா அடக்குமுறை ஏவி விடுவதாக ஹம்சா பின்லேடன் குற்றம் சாட்டினார்.
இதற்கு பழிவாங்கும் வகையில், அமெரிக்காவிலும், வெளிநாடுகளிலும் தாக்குதல் நடத்துவோம் என்றும்எச்சரித்துள்ளார்.