பேருந்து கட்டண மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன்..

244

பேருந்து கட்டண மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
நாகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, டீசல் விலை உயர்வு உள்ளிட்டவற்றை சமாளிக்கவே பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். எனவே, பேருந்து கட்டண உயர்வை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேட்டுக்கொண்டார்.