நாகை மாவட்டத்தில் மழையால் எந்த அசம்பாவிதமும் இல்லை : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் …!

263

நாகை மாவட்டத்தில் மழையால் எந்த அசம்பாவிதமும் இல்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறி, சாகுபடி நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. இந்த நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வைத்தீஸ்வரன் கோயிலில் தண்ணீர் தேங்கியதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களது உடமைகளை காக்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, ஆலங்குடியில் இருந்து தலைஞாயிறு வழியாக வேட்டைக்காரனிருப்பு கடலில் கலக்கும் அரிச்சந்திரா நதியின் முகத்துவாரம் தூர்வாரும் பணியை அமைச்சர் ஓ .எஸ்.மணியன் பார்வையிட்டார். அப்போது முகத்துவாரத்தின் மணல்மேட்டை இயந்திரம் மூலம் எடுத்ததால், தண்ணீர் வேகமாக ஓடக்கூடிய நிலை உண்டாகியிருப்பதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.