அதிமுக ஆட்சியை டெங்கு ஆட்சி எனக்கூறி வரும் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் கண்டனம்..!

228

சிறப்பாக மக்கள் பணி செய்து வரும் அதிமுக ஆட்சியை டெங்கு ஆட்சி எனக்கூறி வரும் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அதிமுக ஆட்சியை டெங்கு ஆட்சி எனக்கூறினால், கடந்த திமுக ஆட்சியை எய்ட்ஸ் ஆட்சி எனக்கூறுவேன் என்று தெரிவித்தார். கடந்த திமுக ஆட்சியின் போது மஹாராஷ்டிராவில் இருந்து விலைமாதர்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து விபச்சாரத்தை ஊக்குவித்து வந்த காரணத்தினால்தான் தமிழகத்தில் எயிட்ஸ் நோய் அதிகம் பரவியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.