லோக் ஆயுத்தா சட்டத்தில் உள்ள குறைப்பாடுகளை எதிர்காலத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம் – அமைச்சர் ஓ.எஸ். மணியன்

224

லோக் ஆயுத்தா சட்டத்தில் உள்ள குறைப்பாடுகளை எதிர்காலத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம் என கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற கைத்தறி ஆதரவு திட்டத்திற்கான கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ்.மணியன், புதிய ஜவுளி கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளியிடுவார் என கூறினார். ஜமூகாளத்திற்கான வரி படிபடியாக குறைக்கப்படும் என உறுதியளித்த அவர், லோக் ஆயுத்தா சட்டத்தில் உள்ள குறைப்பாடுகளை எதிர்காலத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.