ஒருதலை காதலால் விபரீதம்: விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை! வால்பாறை அருகே பரிதாபம்!!

173

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முடீஸ் கல்லாறு எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் இமானுவேல் (25). இவர் வால்பாறையில் உள்ள அரசு கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தார். இவர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தார். சம்பவத்தன்று இமானுவேல் தனது காதலை மாணவியிடம் கூறினார். அவர் ஏற்க மறுத்து விட்டார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்டு வந்த இமானுவேல் கடந்த 17–ந்தேதி வீட்டில் விஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த இமானுவேல் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுபற்றி முடீஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.