முகம் கண்டறிதல் தொழில்நுட்பம் மூலமாக 2,930 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு.

2107

டெல்லியில் காணாமல் போன சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் 4 நாட்களில் முக கண்டறிதல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்டறியப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நாளொன்றுக்கு 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் முகம் கண்டறிதல் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிக்கை அளிக்க டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், பல்வேறு குழந்தைகள் நல காப்பகங்களில் இருக்கும் குழந்தைகளின் முகம் பரிசீலனை செய்யப்பட்டது. அதில், 2 ஆயிரத்து 930 குழந்தைகள் 4 நாட்களில் அடையாளம் காணப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் இந்த முறையை பயன்படுத்தி காணாமல் போன குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க அரசு முயற்சிக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.