ஆர்மேனிய இனப்படுகொலை தினத்தில் கலந்துகொண்ட போப்பாண்டவர் பிரான்சிஸ், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்

215

ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் உள்ள காகாசஸ் மாகாணத்தின் ஒரு பகுதியான
ஆர்மேனியாவில், கடந்த 1915-ஆம் ஆண்டு முதல் 1923-ஆம் ஆண்டு வரையான 8 ஆண்டுகளில், 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர், துருக்கிய பேரரசினால் இனப்படுகொலை செய்யப்பட்டனர். மற்றவர்கள் சொந்த இடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். தொடர்ச்சியாக நடைபெற்றுவந்த இந்த படுகொலை 1923-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முடிவுக்கு வந்தது.

அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஆர்மேனியாவில், இனப்படுகொலை தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நினைவு நாளில் போப்பாண்டவர் பிரான்சிஸ் கலந்துகொண்டார். படுகாலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். ஆர்மேனியாவில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து, தான் இன்றுவரை வருந்துவதாகத் தெரிவித்த போப்பாண்டவர், ஆர்மேனிய மக்கள் துயரங்களை மறந்து, அமைதியுடனும் சமாதானத்துடனும் வாழவேண்டும் என்று, ஆசி வழங்கினார்.