பிரான்சில் 587 அடி உயரமான கட்டிடத்தில் ஏறிய நிஜ ஸ்பைடர்மேன் ..!

857

ஸ்பைடர்மேன் எனப்படும் ராபர்ட் அலைன், பிரான்சில் 587 அடி உயரமுள்ள கட்டடத்தின் சுவரில் ஏறி சாதனை படைத்தார். பாரிஸ் நகரின் நான்காவது பெரிய கட்டடமான 48 மாடிகளைக் கொண்ட டோட்டல் டவரை அரை மணி நேரத்தில் அவர் ஏறிக் கடந்தார். இருப்பினும் உள்ளூர் போலீசார் ஸ்பைடர்மேனைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். 55 வயதான ராபர்ட் அலைன் இதுவரை 150க்கும் மேற்பட்ட கட்டடங்களில் ஏறி சாகசம் செய்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.