ஓரிகன் பூங்காவில் துருவக் கரடிக் குட்டி ஒன்று பனிக்கட்டிகளில் உருண்ட காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

251

ஓரிகன் பூங்காவில் துருவக் கரடிக் குட்டி ஒன்று பனிக்கட்டிகளில் உருண்ட காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
அமெரிக்காவின் போர்ட்லாண்டில் உள்ள ஓரிகன் பூங்காவில் துருவ கரடிக் குட்டி ஒன்று பூங்கா ஊழியர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. உலக வெப்ப மயமாதல் உள்ளிட்ட சூழ்நிலைகளால் அழிந்து வரும் துருவக் கரடிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாக துருவக் கரடி குட்டி பனிக்கட்டிகள் நிரப்பிய தொட்டியில் விளையாடும் காட்சி மற்றும் குளிக்கும் காட்சிகளை பதிவு செய்துள்ளது. இந்த துருவக் கரடிக் குட்டியின் குறும்புத்தனமான காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.