சேலம்- சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் எடுக்கும் விவகாரம் : 4 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

355

சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் எடுக்கும்போது, தாக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு 4 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை – சேலம் இடையே 274 கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலையால் ஏராளமான கிராமங்கள் பாதிக்கப்படும், விளை நிலங்கள் மற்றும் காப்பு காடுகள் அழிக்கப்படும், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என புகார் எழுந்தது. இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. நிலத்தை அளக்க விடாமல் அதன் உரிமையாளர்கள் தடுத்தால், போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் பணிகள் மேற்கொண்டனர். நிலம் கையகப்படுத்தப்பட்ட போது பொதுமக்கள் பலர் தாக்கப்பட்டனர்.

இதனையடுத்து, சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட போது, தாக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.