திருமலை ஆலயத்திற்குள் பக்தர்களை அனுமதிக்க உத்தரவு – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

574

கும்பாபிஷேக நாளின் போது, திருமலை ஆலயத்திற்குள் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், திருப்பதி திருமலை ஆலயத்தில், இதற்கு முன்பு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகளையே தற்போது கடைபிடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.சாமி தரிசன நாளை எதிர் நோக்கி மக்களை காத்திருக்கும் படி செய்யக்கூடாது என தெரிவித்துள்ள அவர்,கும்பாபிஷேக நாளின் போது, திருமலை ஆலயத்திற்குள் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.பக்தர்களுக்கு எவ்வித சிர்மமும் இன்றி கும்பாபிஷேக பூஜைகளை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆந்திர முதல்வரின் உத்தரவை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.