ஒரகடம் அருகே 244 ஏக்கரில் வானூர்தி தொழிற்பூங்கா முதலமைச்சர் பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்!

255
samy

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே 244 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள வானூர்தி தொழிற்பூங்காவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா, சட்டப்பேரவையில் 110-ஆவது விதியின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே வானூர்தி தொழிற்பூங்கா அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி ஒரகடத்தை அடுத்த வல்லம் – வடகால் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் சுமார் 244 ஏக்கர் பரப்பளவில் தமிழக அரசின் சார்பில் வானூர்தி தொழிற்பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வானூர்தி தொழிற்பூங்கா அமைய உள்ள இடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். முன்னதாக, அடிக்கல் நாட்டப்படும் பகுதி மற்றும் விழா மேடை அமைக்கும் பணிகளை தொழில்துறை அமைச்சர் சம்பத் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.