ஓ.பி.எஸ். ஆதரவாளர் செம்மலைக்கு அமைச்சரவை பதவி இல்லை செம்மலை ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி!

326

தமிழக அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக சட்டப் பேரவை உறுப்பினரும், ஓ.பி.எஸ். ஆதரவாளருமான செம்மலை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் ஆறு மாதங்களாகப் பிரிந்துக் கிடந்த அதிமுகவின் இரண்டு அணிகளும் நேற்று ஒன்றாக இணைந்தன. இதையடுத்து ஓ.பன்னீர் செல்வத்துக்குத் துணை முதலமைச்சர் பதவியும், கட்சித் தலைவர் பதவி மற்றும் நிதித்துறை உள்ளிட்டத் துறைகள் வழங்கப்பட்டுள்ளன. ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த க.பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சி, அலுவல் மொழி மற்றும் தொல்லியல் துறைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், கடந்த அதிமுக அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராகவும், சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்த செம்மலைக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான செம்மலைக்கு எந்தப் பதவியும் கிடைக்காததால், அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனிடையே, தனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக செம்மலை தெரிவித்துள்ளார்.