ஓ.பி.எஸ் அணியுடன் இணைப்பு என்பது இனி கிடையாது என அதிமுகவின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

897

ஓ.பி.எஸ் அணியுடன் இணைப்பு என்பது இனி கிடையாது என அதிமுகவின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கடுமையாக விமர்சனம் செய்தார். மாட்டு இறைச்சி விவகாரத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய புகழேந்தி, ஓ.பி.எஸ் அணியுடன் இனி இணைப்பு கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்த்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், கருணாநிதி 100 ஆண்டு காலம் வாழ வாழ்த்துவதாக தெரிவித்தார். ரஜினி அரசியலுக்கு வருவது தமிழகத்திற்கு பேராபத்து என்று கூறிய அவர், மாட்டு இறைச்சி விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் கலைந்து மத்திய அரசின் உத்தரவை எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.