ஆர்.கே. நகரில் தினகரனை டெபாசிட் இழக்க செய்யவேண்டும் என முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

188

ஆர்.கே. நகரில் தினகரனை டெபாசிட் இழக்க செய்யவேண்டும் என முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக புரட்சிதலைவி அம்மா கட்சியின் சார்பில் போட்டியிடும் மதுசூதனனை ஆதரித்து அவர் வீதி, வீதியாக பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர், ஆர்.கே.நகரில் மதுசூதனன் வெற்றி வாகை சூடுவது உறுதி என்று தெரிவித்தார். வாக்காளர்களுக்கு பணத்தை வாரிஇறைத்து எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என தினகரன் துடிப்பதாக குற்றம் சாட்டிய பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய மதுசூதனனுக்கு இரட்டை மின்விளக்கு சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.