ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை : முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

179

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, உட்கட்சி பிரச்சினை, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது மரணத்தில் நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.