பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்க வாய்ப்பு …!

471

தேவர் குரு பூஜையின் போது அணிவிக்கப்படும் தங்க கவசத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் மதுரை வங்கி வழங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், ஆண்டுதோறும் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். 2014ம் ஆண்டு 14 கிலோ எடையில் நான்கரை கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்ட தங்க கவசத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தேவர் நினைவிடத்திற்கே வந்து நேரில் வழங்கினார். இந்த தங்க கவசம் மதுரை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் குருபூஜையின் போது, தேவர் சிலைக்கு அணிவிக்கப்படுவது வழக்கமாக இருந்தது.

இதனிடையே, அதிமுகவில் எடப்பாடி அணி, தினகரன் அணி என இரண்டு அணிகளாக பிரிந்து, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வரும் 28, 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவின் போது, தேவர் சிலைக்கு அணிவிக்கப்படுமா? என்ற ஐயம் எழுந்துள்ளது. இந்தநிலையில், தங்க கவசத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் மதுரையில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை வழங்க, வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.