அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரண்டு பேர் முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

270

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரண்டு பேர் முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நடராஜனுக்கு எதிராக முதலமைச்சர் பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். முதலமைச்சர் பதவியிலிருந்து தாம் நிர்ப்பந்தப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாகவும் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். மேலும், தமக்கு ஆதரவாக உள்ளவர்களின் பெயர்களை விரைவில் வெளியிடபோவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி ஆறுக்குட்டி ஆகியோர் முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோன்று, மேலும் சில சட்டப்பேரவை உறுப்பினர்களும் முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.