முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமருடன் இன்று சந்திப்பு | ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவர பிரதமரிடம் வலியுறுத்தப்படும் .

147

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்துவேன் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியின் நிலையை கோரிக்கை மனுவாக பிரதமரிடம் கொடுத்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்த சந்திப்பின் போது, தமிழர்களின் பாரம்பரிய உரிமையான ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அவசர சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்திவேன் எனவும் அவர் தெரிவித்தார். மத்திய-மாநில அரசகளுக்கு இடையே சுமுகமான உறவு இருக்க வேண்டும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா விரும்பியதாக குறிப்பிட்ட அவர், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உரிய நியாயம் கிடைக்கும் வரை தமிழக அரசு சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.