வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்..!

321

வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்.
கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள, முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வைகை அணையிலிருந்து நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என அறிவித்திருந்தார். இதன்படி, வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார்.
வைகை அணையில் இருந்து நாள் ஒன்றுக்கு 900 கனஅடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதன் மூலம் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.