ஓ.பன்னீர்செல்வம் மரியாதை நிமித்தமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்தார்…!

152

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை நிமித்தமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்தார்.

டெல்லியில் முகாமிட்டுள்ள துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது தற்போதைய அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து அமித்ஷாவிடம் அவர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், டெல்லி வடக்கு பிளாக்கில் அமைந்துள்ள நிதியமைச்சகம் அலுவலகத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை நிமித்தமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்கு தேவையான நிதி உதவிகள் குறித்து கோரிக்கை மனு ஒன்றினை அவர் அளித்தார். மேலும், மத்திய அமைச்சர்கள் பலரையும் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.