பன்னீர்செல்வம் முதலமைச்சராக தொடர்வார் என பிரபல சித்த ஜோதிடர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

980

தமிழகத்தில் மீண்டும் முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து ஆட்சி செய்வார் என பிரபல சித்த ஜோதிடர் கோவிந்தராஜ் கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா கீரக்களூர் அருகே புன்சையூர் கிராமத்தில் உள்ளவர், சித்த ஜோதிடர் கோவிந்தராஜ். மேலும், இவர் பொதுமக்களுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்து வருகிறார். இந்நிலையில், தஞ்சாவூருக்கு வருகை தந்த கோவிந்தராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சி நடைபெறும் என உறுதிபட தெரிவித்தார்.