விரைவில் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்கும் என துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நம்பிக்கை…!

247

விரைவில் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்கும் என துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில், அதிமுகவின் 46ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் இருந்தபோது காவேரி, முல்லைபெரியாறு உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிவித்தார். சொத்துக்களை மட்டுமே பாதுகாத்து கொள்ள மட்டுமே திமுக ஆட்சி நடத்தியதாக குற்றஞ்சாட்டிய துணை முதல்வர், விரைவில் தங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.