ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் உருக்குலைந்து போயுள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் வேதனை …!

346

ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் உருக்குலைந்து போயுள்ளதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப்போட்ட ஒகி புயலால் அம்மாவட்ட மக்கள் நிலைகுலைந்துள்ளனர். இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரலாறு காணாத ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆட்சியரின் அறிக்கை அளித்த பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதியளித்தார்.