ஓ.பி.எஸ்-ம் , இ.பி.எஸ் -ம் மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படுவதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு ..!

313

ஓ.பி.எஸ்-ம் , இ.பி.எஸ் -ம் மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படுவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக அரசு ஜெயலலிதாவின் திட்டங்களை முறையாக செயல்படுத்தவில்லை என்று கூறினார். அரசியல் ஆதாயத்திற்காக ஜெயலலிதா சிலையை அவசரம் அவசரமாக திறந்து வைத்துள்ளதாகவும், முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் ஆகி விட்டதாகவும் அவர் விமர்சித்தார். தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் இசைக்க வேண்டும் எனவும் தினகரன் வலியுறுத்தினார்.