தேர்தலில் வெற்றி அவசியம் – கூட்டறிக்கை

288

இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டியது அவசியம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக அரசு தொடர்ந்து நடைபோடும் என உறுதியளித்துள்ளனர். பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது குறித்து மத்திய அரசிடம் இருந்து விரைவில் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அரசைக் காத்து, மக்களிடையே நற்பெயர் பெற்று, எதிர்வரும் இடைத்தேர்தல், பொதுத் தேர்தல் என அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெறுவது மிகவும் அவசியம் என்றும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்ணாவின் புகழ் காத்து, எம்ஜிஆர் வழியில் நடந்து, ஜெயலலிதா அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி, வெற்றி மேல் வெற்றி பெறுவோம் எனவும் இருதலைவர்களும் தெரிவித்துள்ளனர்.