ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே புரிதல் இல்லை – ஜெ.தீபா!

835

மத்திய அரசின் கட்டாயத்தால் இணைந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே புரிதல் இல்லை என ஜெ.தீபா விமர்சித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் கட்டாயத்தலும், அதிமுகவில் இருக்கும் சக்தியின் பிடியாலும் இணைந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே புரிதல் இல்லை எனவும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிச்சயமாக போட்டியிட போவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய தீபா, தொண்டர்கள் யாரை முடிவு செய்கிறார்களோ, அவர்களுக்கு தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் எனவும், தமிழக சுகாதாரத்துறை டெங்கு நோயை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என குற்றம்சாட்டினார்.