துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தாதது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

159

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தாதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கக் கோரி திமுக சார்பில் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மூன்று மாதங்கள் ஆகியும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தாதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க ஏன் உத்தரவிடக் கூடாது என்று கேட்ட நீதிபதிகள் மீண்டும் விசாரணையை வருகிற திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.