தந்தை பெரியாரின் 139வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை..!

457

தந்தை பெரியாரின் 139வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 139வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள அவரது சிலைக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்கள் மதுசூதனன், கே.பி. முனுசாமி மற்றும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தமது கணவர் மாதவனுடன் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தீபா, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அதிமுக அரசு இருப்பதாக தெரிவித்தார். அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் பெரியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.