எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தளபதியாக மட்டுமே இருக்க முடியுமே தவிர, என்றைக்குமே மன்னர் ஆகமுடியாது என, அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

224

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தளபதியாக மட்டுமே இருக்க முடியுமே தவிர, என்றைக்குமே மன்னர் ஆகமுடியாது என, அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.
ஈரோட்டில் மேதினத்தையொட்டி, அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அரசு வேகமாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டிய ஸ்டாலினுக்கு தமிழக அரசு, விவசாயிகள் நலன் உட்பட பல்வேறு துறைகளில் மேற்கொண்டு வரும் பணிகளை சுட்டிக்காட்டி பதில் அளித்தார். அத்துடன், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தளபதியாக மட்டுமே இருக்க முடியுமே தவிர, என்றைக்குமே மன்னர் ஆகமுடியாது என, அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்தார்.