தேயிலை விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும் – அய்யாக்கண்ணு

109

தேயிலை விவசாயிகள் வாங்கிய கடனை, மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என்று அய்யாக்கண்ணு வலியுறுத்தியுள்ளார்.

நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யக் கோரியும், விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தியும் அய்யாக்கண்ணு தலைமையில் தென்னிந்திய தேயிலை வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் படுக தேச கட்சியினர் மற்றும் தேயிலை விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு, தேர்தல் வரும்போது விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்று கூறுவதும், தேர்தல் முடிந்து விட்டால் அடிமைகள் என நினைப்பதும் வாடிக்கையாகி விட்டதாக தெரிவித்தார். பசுந்தேயிலைக்கு லாபகரமான விலையை கொடுக்க மறுப்பதாக அவர் குற்றச்சாட்டினார்.