லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!

256

ஓசூரில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருபவர் வாசுதேவராஜ். இவர் தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தார். இந்நிலையில் பாகலூர் அடுத்த தில்லை நகர் பகுதியில் வரும்போது, நின்றுகொண்டிருந்த லாரியின் மீது கார் பலமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த வாசுதேவராஜ், அவரது மனைவி ரமா, கோபால் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே நின்றுகொண்டிருந்த லாரியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.