ஊழல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

276

ஊழல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மைச் செயலர் ராஜேந்திர குமார், ஊழல் விவகாரம் தொடர்பாக, கடந்த 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ராஜேந்திர குமார் உட்பட, கேஜ்ரிவால் அலுவலகத்தின் முன்னாள் உதவி செயலர் தருண் சர்மா, ராஜேந்திர குமாருக்கு நெருக்கமாகக் கருதப்படும் அசோக் குமார், நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.கவுஷிக் ஆகியோரையும் சிபிஐ கைது செய்தது. இந்த நிலையில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் ராஜேந்திர குமாருக்கு ஜாமீன் வழங்கியது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் ஒரு லட்சம் ரூபாய் ஜாமீனில் ராஜேந்திர குமாரை விடுவித்து உத்தரவிட்டார்.