ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு. திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜர்.

260

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணைக்காக திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்கள்.
நாட்டையே உலுக்கிய ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் மீதான வழக்கு டெல்லி சி.பி.ஜ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த வழக்கின் விசாரணைக்காக கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது, சி.பி.ஜ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் தங்கள் தரப்புக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஓ.பி.சைனி வழக்கு விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.